Accessible Version மாற்றுத்திறனாளிகளுக்காக /
Health & Family Welfare Department
Government of Tamil Nadu
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை
தமிழக அரசு

கொரோனா வைரஸ் பற்றி

covid-1
covid-2

கொரோனா வைரஸ்கள் என்பவை பெரிய வைரஸ் குடும்பத்தை சார்ந்தவை. இவை சாதாரண சளி முதல் MERS-CoV மற்றும் SARS-CoV போன்ற கடுமையான மூச்சுத்திணறல் நோய்கள் வரை உருவாக்கக்கூடிய குணம் கொண்டவை.

இவற்றுள், கொரோனா வைரஸ் நோய் என்பது 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை வைரஸ் நோய் ஆகும். இந்நோய் இதற்கு முன்னர் மனிதர்களிடம் அடையாளம் காணப்படவில்லை.

கொரோனா வைரஸ்கள் விலங்குகளிடம் காணப்படுபவை. இவை விலங்குகளிடம் இருந்துதான் மனிதர்களுக்கு பரவியிருக்க வேண்டும். விரிவான ஆய்வின் முடிவில், SARS-CoV புனுகு பூனைகளிலிருந்து மனிதர்களுக்கும், MERS-CoV ஒட்டகங்களிலிருந்து மனிதர்களுக்கும் பரவியது கண்டபிடிக்கப்பட்டது. பல வகை கொரோனா வைரஸ்கள் விலங்குகளிடம் காணப்பட்டாலும், அவை அனைத்தும் மனிதர்களுக்கு பரவியதாக இதுவரை தகவல் இல்லை.

மூச்சுக்குழல் அழற்சி, காய்ச்சல், இருமல், மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை இந்நோய்த் தொற்றின் பொதுவான அறிகுறிகள் ஆகும். மேலும் இந்நோய் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிமோனியா, கடுமையான சுவாச நோய்கள், சிறுநீரக செயலிழப்பு மற்றும் இறப்பும் கூட ஏற்படுத்தலாம்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க அடிக்கடி கை கழுவுதல், மற்றும் இருமும் போதும் தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை மூடுதல், நன்கு சமைக்கப்பட்ட இறைச்சி மற்றும் முட்டைகளை உண்ணுதல் ஆகியவையே சிறந்த வழிகளாகும். மேலும் காய்ச்சல், இருமல், தும்மல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நோயின் அறிகுறிகள் உள்ளவர்களிடமிருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இருக்கவேண்டும்.

இந்த இணையதளத்தில் உங்களுக்கு தேவையான தகவல்கள். வழிகாட்டல்கள், தமிழக அரசு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) பரவல் விவரங்கள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளலாம். தினசரி புதிய தகவல்களுக்கு இந்த பக்கத்தைப் பார்வையிடவும்.

ஆதாரம்: உலக சுகாதார நிறுவனம்

கொரோனா வைரஸ் குறித்த பிற இணைய தளங்கள்